தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் இன்று (நவம்பர் 13) தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்தனர். சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் நேற்று இரவு ஏற்பட தீ விபத்தை 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். சென்னையில் மட்டும் நேற்று 148 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது காலை 6 -7 மணி மற்றும் இரவு 7 – 8 ஆகிய இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2,095 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டணம் உயர்வு!
சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?