கோவை உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில், ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி ஜமேஷா முபீன் என்ற நபர் காரில் பயணித்த போது சிலிண்டர் வெடித்து உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், ஜமேஷா முபீன் உயிரிழந்த வழக்கில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா மற்றும் முகமது அசாருதீன், ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை போலீசார் அக்டோபர் 23-ஆம் தேதி தனிப்படை போலீசா கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் 6-வது நபராக ஜமேஷா முபின் உறவினரான அப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
மோதலில் முடிந்த மிஸ் இலங்கை அழகி போட்டி!
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!