கோவை கார் வெடிப்பு: ஜமேஷா முபீன் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி!

Published On:

| By Selvam

கோவை கார் குண்டு வெடிப்பில் கைதான 5 பேரையும் கோவையில் உள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (டிசம்பர் 25) விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபீன் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த நவம்பர் 29-ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்த 9 பேரில் உமர் ஃபாரூக், முகமது அசாருதின், அப்சர்கான், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ் ஆகிய ஐந்து பேரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி என்.ஐ.ஏ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி முதல் அவர்களிடம் சென்னையில் மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு வந்தநிலையில், நேற்று இரவு 5 பேரும் கோவை அழைத்து வரப்பட்டார்கள்.

இந்தநிலையில் இன்று காலை கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள அல்லமீன் காலனியில் 5 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களுடைய வீடுகள், உயிரிழந்த ஜமேஷா முபீன் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

5 குழுக்களாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களது வாக்குமூலங்களை போலீசார் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

செல்வம்

அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share