கோவையில் சிலிண்டர் வெடித்து கார் சிதறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் கோட்டை ஈஸ்வரன் கோவில் சாலையில் மாருதி கார் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை உக்கடத்தில் நேற்று (அக்டோபர் 23) அதிகாலை காரில் பயணித்த போது ஜமேஷா முபீன் என்ற நபர் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் மாருதி கார் அதிகாலை 4.05 மணியளவில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டி.என். 01 எப்.8163 என்ற பதிவெண் கொண்ட வெளிர் நீல நிறத்திலான அந்த மாருதி கார், அதிகாலை 4 .05 மணியளவில் கோட்டை ஈஸ்வரன் கோவில் சாலையில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கார் வெடித்து சிதறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் இந்த வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
வினோத் அருளப்பன்
தி பாஸ் ரிட்டர்ன்ஸ் : ஆக்ஷன் கெட்டப்பில் விஜய்
வாத்தி : மிரட்டல் லுக்கில் தனுஷ்