குற்றாலத்தில் குளிக்க தடை!

தமிழகம்

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மாதம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, மெயின் அருவியை தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து கடந்த 1ஆம் தேதி சீரானதையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் நீராடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 2) இரவு தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

குளிர்காலக் கூட்டத் தொடர்: காங்கிரஸ் இன்று ஆலோசனை!

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் மரணம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.