மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த எடுத்த நடவடிக்கை என்ன? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

தமிழகம்

மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த எம்.சான்ட் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கார்த்திக் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் மணல் குவாரி நடவடிக்கைகள் அரசால் மட்டுமே செய்யப்படுகிறது. TN Sand செயலி மூலமாக மக்களும், லாரி உரிமையாளர்களும் பதிவு செய்து மணலை வாங்கி கொள்ளலாம்.

ஒரு யூனிட் மணலை 1000 ரூபாய்க்கு அரசு விற்பனை செய்து வருகிறது. ஆனால், திருச்சி கனிம வளத்துறையின் கனிமவளத்துறை பொறியாளர், செயற் பொறியாளர், தஞ்சை கனிம வளத்துறையின் செயற் பொறியாளர் ஆகியோர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மணல் கிடங்கில் அவர்களுக்கு சொந்தமான நபர்கள் மூலமாக பதிவு செய்து மணலை ரூ.1000க்கு பெற்று கொள்கின்றனர்.

ஆனால், சட்டவிரோதமான முறையில் மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.10,000 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக அரசுக்கு பெருமளவு இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.

எனவே, மணல் விற்பனை தொடர்பான அரசாணை எண் 4ஐ முறையாக அமல்படுத்தினால் இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும். மேலும், அதை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை எண் 4ஐ முறையாக அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தொடர்ந்து இந்த வழக்கை ஜூன் 3ஆம் வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களவை தேர்தல்: 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

மேம்பாலப் பணிகள்: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *