கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய உத்தரவு!
கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும், நிலையில் கொடநாடு பங்களாவில் ஆய்வு நடத்த இன்று (பிப்ரவரி 23) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ், சயான் ஆகிய இருவர் மட்டும் ஆஜரானார்கள்.
கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி வழங்கினார்.
சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்ய அனுமதி அளித்த நீதிபதி, தடயங்களை மாற்றக்கூடாது என்று நிபந்தனை விதித்தார்.
பங்களாவில் ஆய்வு மேற்கொள்ளும் போது, அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அமைச்சர் பிடிஆரை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்? – காரணம் சொன்ன ஸ்டாலின்
திமுகவின் தொங்கு சதையல்ல, காங்கிரஸ் – முதல் கூட்டத்தில் சீறிய செல்வப் பெருந்தகை