பெரியாா் சிலை குறித்து சா்ச்சையாக பேசியதாக கைது செய்யப்பட்ட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனின் ஜாமீன் மனு இன்று (ஆகஸ்டு 18) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவையொட்டி, சென்னை மதுரவாயலில் கடந்த ஆக. 1-இல் நடைபெற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டுப் பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் எதிரேயுள்ள பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசினார்.
இது தொடா்பாக தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினர் அளித்த புகாாரின்படி, கடந்த 15ம் தேதி புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை கைது செய்த காவல் துறையினா் சிறையில் அடைத்தனா்.
இதனையடுத்து அவர் தனக்கு ஜாமீன் கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
பெரியார் சிலை குறித்து அவதூறு : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கைது