கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் குப்பத்தில் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாய தொழிலாளி. இவர் அதே பகுதியில் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 6) ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென அவர்களின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக, கணவன் – மனைவி இருவரும் பலத்தக் காயத்துடன் உயிர்த் தப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வீடு அரசால் கட்டி கொடுக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் இதேபோல் அரசு தொகுப்பு வீட்டில் வசிக்கும் மக்கள் நம்முடைய வீடும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தப் பகுதியை ஆய்வு செய்து புதிய அரசு தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: இள வயதில் முதுகுவலி.. என்ன காரணம்? தீர்வு உண்டா?
காலையில ஏர் ஷோ, நைட் பீர் ஷோ – அப்டேட் குமாரு
பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகும் ரோஸ்மேரி வாட்டர்: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா?
ஹெல்த் டிப்ஸ்: கர்ப்பப்பையை நீக்கினால் தாம்பத்ய உறவு பாதிக்குமா?