அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தில் ஒரே பிரசவத்தில் நாட்டு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகில் உள்ள கழுமங்கலத்தில் ராமசாமி மகன் தர்மதுரை முந்திரி விவசாயத்தோடு நாட்டு மாடு வளர்த்து வருகிறார்.
இந்த கிராமத்தில் இவர் மட்டுமின்றி மற்ற அனைத்து விவசாயிகளும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளா்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.
இவா்கள் கலப்பினமில்லாத நாட்டு மாடுகளை வளா்ப்பது மட்டுமின்றி; மாடுகளை தினம் தோறும் சுமார் 5 கி.மீ. தூரம் வரை அருகில் உள்ள முந்திரி காட்டில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்கின்றனா். இதன் மூலம் முந்திரிக்காட்டில் மேயும் மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் முந்திரி மரங்களுக்கு முக்கிய ஊட்டச்சத்து உரமாகிறது.
இந்த நிலையில் விவசாயி தர்மதுரை வளத்து வந்த நாட்டு மாடு ஒன்று ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. இந்த தகவல் அந்த ஊர் மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்றுகள் இரண்டும் நல்ல நிலையில் துள்ளிக் குதித்து ஓடுவதைப் பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனர்.
பெரும்பாலும் நாட்டு மாடுகள் ஒரு பிரசவத்தில் ஒரு கன்று மட்டுமே பிரசவிக்கும் தன்மையுடையவை. அங்கொன்றும் இங்கொன்றுமாக 3 முதல் 5 சதவிகிதம் மட்டுமே அரிதாக இரண்டு கன்றுகளை ஈன்று தரும் என்று விலங்கியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதுபோன்று அரியலூரில் இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.
வேந்தன்
சீட்டுகட்டாய் சரிந்த கட்டிடங்கள் : தவறை திருத்திக் கொள்ளுமா துருக்கி?
அதிமுகவில் சாதி யுத்தம்: ’புதிய’ பன்னீர் செல்வத்தின் சிங்கப் பாதை?