கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்

புரட்டாசி மாதத்தில் கல்யாணங்கள், விசேஷங்களில் விருந்து சாப்பிடுவது வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், நாக்கு செத்துப் போயிருக்கும் பலருக்கு.

அப்படிப்பட்டவர்களுக்குத்தான் காரசாரமான இந்த நாட்டுக்கோழி சாப்ஸ் ரெசிப்பி. தீபாவளி அன்று அசைவம் உணவு சாப்பிடுபவர்களுக்கும் ஏற்றது இந்த சாப்ஸ்.

என்ன தேவை?

நாட்டுக்கோழிக் கறி – 500 – 600 கிராம்
நல்லெண்ணெய் – 100 மில்லி
சோம்பு – ஒரு கிராம்
பட்டை – ஒரு கிராம்
கிராம்பு – ஒரு கிராம்
அன்னாசிப்பூ – ஒரு கிராம்
ஏலக்காய் – ஒரு கிராம்
பிரிஞ்சி இலை – ஒரு கிராம்
வெந்தயம் – ஒரு கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
பூண்டு விழுது – 30 கிராம்
இஞ்சி விழுது – 20 கிராம்
மஞ்சள்தூள் – 2 கிராம்
தக்காளி – 100 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 15 கிராம்
மிளகாய்த்தூள் – 30 கிராம்
கறிவேப்பிலை – 2 கிராம்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் மசாலா – 50 கிராம்
(துருவிய அரை மூடி தேங்காய், முந்திரி-20 கிராம், கசகசா-10 கிராம் இவற்றை எல்லாம் மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும்)
நாட்டுக்கோழி மசாலா…
சோம்பு – 4 சிட்டிகை
சீரகம் – 3 சிட்டிகை
மிளகு – 15 கிராம்
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – ஒன்று (இவற்றை வெறும் சட்டியில் வறுத்து அம்மியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.)

எப்படிச் செய்வது?

வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். சிவந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியவுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

பிறகு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நாட்டுக்கோழி மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் நாட்டுக்கோழியைச் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு சேர்க்கவும்.

இத்துடன் தேங்காய் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கோழியை வேகவைத்து, சரியான பதத்தில் அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

இறால் மசால்

கொங்கு நாட்டுக் கோழிக்குழம்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts