தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்கள் 6067 ஆகவும், பி.டி.எஸ் படிப்புக்கான இடங்கள் 1380 ஆகவும் உள்ளது.
இந்த இடங்களுக்கான கலந்தாய்வு இன்று(அக்டோபர்19) முதல் தொடங்கியுள்ளது.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு ஆகிய சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் 212. ஆனால் விண்ணப்பித்தவர்கள் வெறும் 82 பேர். அதில் 50 பேர் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.
முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 11 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் 356 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அனைவரும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று விளையாட்டுப் பிரிவில் 8 இடங்களுக்கு 216 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதேபோன்று இன்று முதல் 25 ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கு இணைய வழி வாயிலாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
www.tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக கலந்தாய்வு நடக்கிறது.
20 ஆம் தேதி அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சுயநிதி நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளவர்களுக்கு இணைய வழி வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இரண்டாவது சுற்று கலந்தாய்வு – 2.11.2022 முதல் 10.11.2022 வரை தேசிய மருத்துவ பிரிவினருக்கும், 7.11.2022 – 14.11.2022 வரை தமிழக அரசின் மாணவர்களுக்கும் நடைபெறுகிறது.
2022-2023 இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நவம்பர் 15 ஆம் தேதி முதல் கல்லூரி தொடங்குகிறது.
கலை.ரா
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: ஸ்டாலின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?
ஓ.பி.எஸ்சை வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!