எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 11 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதியை மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.
எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபர் 11 முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் இரண்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும்.
முதற்கட்ட கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள்ளும், 2 ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 18 ஆம் தேதிக்குள்ளும் கல்லூரிகளில் சேரவேண்டும்.
இதேபோன்று அக்டோபர் 17 முதல் 28-ம் தேதிக்குள் மாநிலங்கள் முதற்கட்ட கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம். மாநிலங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும்.
முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 4 ஆம் தேதிக்குள்ளும், 2 ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 21 ஆம் தேதிக்குள்ளும் கல்லூரிகளில் சேரவேண்டும்.
விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வு டிசம்பர் மாதம் நடைபெறும். முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15-ல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
பிரதமர் நிகழ்ச்சி: பத்திரிகையாளர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் கேட்பு!