ஆகஸ்ட் 5 முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு !

தமிழகம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் குறிப்பிட்டுள்ளது. இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் மேற்கொள்ளப்பட்டது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , “இந்த ஆண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். அதில் 2.94 லட்சம் போ் வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் 130 இணைப்புக் கல்லூரிகளில் பி.ஏ , பி.எஸ்சி , பி.காம் , பிபிஏ , பிசிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்” என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தி.நகர்: நெரிசலைக் குறைக்கும் நடை மேம்பாலம்! திறப்பது எப்போது?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.