மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாட்டின் நிலை என்ன?

Published On:

| By Selvam

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த 12-ஆம் தேதி தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியிருந்தது.

அதன்பிறகு இரண்டு நாட்கள் சற்று குறைந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 618 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. எனவே பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவிகிதமாக உள்ளது. இது இந்தியாவின் சராசரி தொற்று விகிதம் 0. 61-ஐ விட அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், தொற்று அதிகரித்து வரும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார். 

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து கால அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் பேசிய தமிழ்நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

குறிப்பாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் நிகழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

இன்புளுயன்சா ஹெச்3என்2 கடந்த நாட்களில் தமிழக அரசால் நடத்தப்பட்ட முகாம் மூலமாக 2600 நபர்களுக்கு கண்டறியப்பட்டது. மற்றப்படி அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

மருந்துகள் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள். அதனால் அதுகுறித்து அச்சப்பட வேண்டிய நிலை இல்லை’’ என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

மோடிக்கு நோபல் பரிசா? நான் சொன்னேனா?: டோஜே விளக்கம்!

கிச்சன் கீர்த்தனா: கம்பு – பாலக் கீரை வடாகம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share