சீனாவில் பரவத் தொடங்கியுள்ள பி.எஃப்-7 ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் நேற்று (டிசம்பர் 21) ஒடிசாவில் ஒருவருக்கும் குஜராத்தில் 2 பேருக்கும் என மூன்று பேருக்கு உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 22) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைக் கண்காணிப்பது, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது மற்றும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
யாருக்கேனும் அறிகுறி இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொற்று உறுதியாகும் அனைத்து மாதிரிகளும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுத்தவும் தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
மோனிஷா