துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் உருமாறிய பிஎப் 7 கொரோனா தீவிரமாய் பரவி வரும் நிலையில் அங்கிருந்து மதுரை வந்த இருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பிஎப் 7 வகை பாதிப்பா என கண்டறியப் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யச் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடைய மாதிரிகள் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மாநில பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் ரேண்டமாக 2 சதவிகிதம் அளவுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
பொங்கல் தொகுப்பில் கரும்பு : அதிமுக ஆர்ப்பாட்டம்!
சீனாவிலிருந்து மதுரை வந்தவர்களுக்கு பிஎப்7 பாதிப்பா?