கோரமண்டல் அதிவிரைவு ரயில் விபத்து குறித்து தகவல் அறிய உதவி எண்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் நேற்று (ஜூன் 2) இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 4 பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த விபத்தில் 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் 50 பேர் உயிரிழந்ததிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் 800-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிய ஏற்கனவே ஒடிசாவில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கோரமண்டல் அதிவிரைவு ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த வண்டி, மாலை 7 மணிக்கு ஒடிசாவில் விபத்துக்குள்ளானது சம்பந்தமாக தகவலறிய தொடர்புக் கொள்ள காவல்துறை தலைமை இயக்குநர் கட்டுப்பாட்டறையின் 044 28447701 மற்றும் 044 28447703 என்ற தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டு அறியலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
மல்யுத்த வீரர்கள் போராட்டம்: ஆதரவளித்த 1983 சாம்பியன் டீம்!
சென்னை கோரமண்டல் ரயில் விபத்து : 30 பேர் பலி?