கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி

Published On:

| By Selvam

Corn Rye Garlic Bread

குளிர்காலத்தில் சூடான உணவு மட்டுமல்லாமல் சத்தான உணவும் அவசியம். அதற்கு சுவையான இந்த சோளம் கம்பு பூண்டு ரொட்டி உதவும்.  சோளத்திலும் கம்புவிலும் அதிகமான புரதம், தாமிரம், இரும்பு சத்துகள் உள்ளன. மேலும் மெக்னீசியம், கால்சியம் சத்துகளும் இருப்பதால் உடலுக்குத் தேவையான எனர்ஜியும் கிடைக்கும்.

என்ன தேவை?

சோள மாவு – அரை கப்
கம்பு மாவு – அரை கப்
பூண்டுத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகு – 6
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

சோள மாவு மற்றும் கம்பு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் பூண்டுத்தூள், நொறுக்கப்பட்ட மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். சிறிய உருண்டைகளாகப் பிரித்து, தட்டையாகத் தேய்த்துக்கொள்ளவும். ஒரு கடாயைச் சூடாக்கி, ரொட்டியைப் போட்டு சுட்டெடுக்கவும். ஆரோக்கியமான சோளம் கம்பு பூண்டு ரொட்டி தயார். குருமாவுடன் சூடாகப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டீக்கடைக்கு கூப்பிட்டது தப்பா? : அப்டேட் குமாரு

வெள்ளத்தில் நனைந்த புத்தகங்கள்… காக்க போராடும் மாணவர்கள்!

தி.மலையில் மூன்றே மாதத்தில் உடைந்த புதிய பாலம் : எடப்பாடிக்கு தமிழக அரசு பதில்!

சென்னையில் அதிகரிக்கும் டாக்ஸிகள்… காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share