கிச்சன் கீர்த்தனா : சோளம் – ஜவ்வரிசி மசாலா புலாவ்

தமிழகம்

இந்தியாவில் பஞ்ச காலத்தில், மக்கள் பசியை அதிகம் போக்க உதவிய தானியம் சோளம். நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த சோளம், உடல் எடை அதிகரிக்க உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்சினை இருப்பவர்கள், ரத்தச் சோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது.

சிறுநீரைப் பெருக்கும்; உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். இதில் உள்ள பீட்டாகரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். இப்படிப்பட்ட சோளத்தில் ஜவ்வரிசி சேர்த்து மசாலா புலாவ் செய்து அசத்தலாம். பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கொடுத்து அனுப்பலாம்.

என்ன தேவை?

ஜவ்வரிசி – ஒரு கப்
வறுத்த வேர்க்கடலைப் பொடி – அரை கப்
வறுத்த வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன் (தோல் நீக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (இரண்டாகக் கீறவும்)
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
சீரகம் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, உலரவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு வேர்க்கடலை, சீரகம் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், ஸ்வீட் கார்ன் முத்துகள், ஜவ்வரிசி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

சாமை – நெல்லிக்காய்ப் புட்டு

சர்க்கரை நோய்: உணவு குறித்தான கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.