Coonoor tourist bus overturned

குன்னூரில் பள்ளத்தில் பேருந்து கவிந்து விபத்து: 8 பேர் பலி!

தமிழகம்

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து குன்னூருக்கு சுற்றுலா வந்து திரும்பிய பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை பாதையில் 54 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது.

பேருந்து பள்ளத்தில் விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து முதலில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 8  பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

தேவி கலா, நிதின் கண்ணா, முருகேசன், முப்புடாதி, கௌசல்யா, ஜெயா, தங்கம், இளங்கோ ஆகிய 8 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரம் என்பதால் டார்ச்லைட் உள்ளிட்ட விளக்குகளை பயன்படுத்தி வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கோவை ஆட்சியர் அருணா, டிஐஜி சரவணன் ஆகியோர் உள்ளனர்.

சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது நேர்ந்த இந்த விபத்து தென்காசி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரியா

டிஜிட்டல் திண்ணை: முஸ்லிம் ஓட்டு… எடப்பாடி எடுத்த திடீர் சர்வே!

அல்டிமேட் சவுண்ட் எபெக்டில் அட்டகாசமான எபிக்பூம் ஸ்பீக்கர்!

சசிகுமாரின் “எவிடன்ஸ்” : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மாதக் கடைசியில் பாக்கெட் காலியா..? ; உங்களுக்கான டிப்ஸ்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *