சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 13) சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ.7,340-க்கும், ஒரு சவரன் ரூ. 200 உயர்ந்து ரூ. 58,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ. 8,005-க்கும், ஒரு சவரன் ரூ. 200 உயர்ந்து ரூ. 64,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2000 உயர்ந்து ரூ.1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தை பிறக்கும் பொங்கல் திருநாள் தமிழர்களால் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் புதிய தங்க நகைகளால் பெண்கள் தங்கள் அலங்கரித்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வாரமாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்வருக்கு ஆணவமா? : ஆளுநருக்கு தக் ரிப்ளை கொடுத்த துரைமுருகன்
48வது சென்னை புத்தகத் திருவிழா நிறைவு : புதிய உச்சம் தொட்ட விற்பனை!
டாப் 10 நியூஸ் : பிரதமர் மோடி திறக்கும் சுரங்கப்பாதை முதல் மகா கும்பமேளா வரை!