கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.100 என்று இருந்த நிலையில் தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.250-க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் உட்பட தென்னிந்தியாவில், பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. மராட்டியம், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டுக்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் பூண்டின் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது. காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.230-க்கும், வெளி மார்க்கெட்டில் ரூ.250-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
வட மாநிலங்களில் இந்த ஆண்டு பூண்டின் உற்பத்தி அபரிமிதமான இருந்தபோதிலும் அதிக விலையை எதிர்பார்த்து இடைத்தரகர்கள் இருப்பு வைத்திருப்பதாக வியாபாரிகள் நம்புகின்றனர். குறிப்பாக சீனாவிலிருந்து ஏற்றுமதி தேவை அதிகரித்து வருவதால், சில்லறை சந்தையில் பூண்டின் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பூண்டின் விலையை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்களின் இல்லத்தரசிகளின் கோரிக்கையாக உள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஹெல்த் சூப்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
லேசான மழை… கன பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு
மாயமான கப்பலை வைத்து புது படம்… “2018” இயக்குனரின் அடுத்த முயற்சி!