முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (நவம்பர் 14) சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே கே.சி.வேணுகோபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். congress leaders respect to Nehru
இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் ஜவகர்லால் நேரு. சுமார் 17 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த நேரு,
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்(IIT),அகில இந்திய மேலாண்மை கல்வி நிலையம்(IIM) மற்றும் ஏராளமான பொத்துறை நிறுவனங்களை நாட்டில் உருவாக்கினார்.
தன் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில்,
நேருவின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 14) ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் ’குழந்தைகள் தினம்’ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் உள்ள நேருவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு,
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், சாமிநாதன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதே போன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலரும் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். congress leaders respect to Nehru
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?
விடிய விடிய கனமழை…. 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!