திருச்சி தாக்குதல்: திமுகவினருக்கு ஜாமீன்!

தமிழகம்

கடந்த மார்ச் 15 ஆம் தேதி திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் காலனியில் நடந்த இறகுப்பந்து மைதானம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பியபோது திமுக முதன்மைச் செயலாளரும் , அமைச்சருமான கே.என்.நேருவுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டினர்.

இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் சிவாவின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதற்கிடையே திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கும் சென்ற அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் , கைது செய்யப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அதன்பேரில் திமுக நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், துரைராஜ், ராமதாஸ், திருப்பதி ஆகியோர் மீது, 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர்.

திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2-ல் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரையும் வரும், 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் ஐந்து பேரின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார்.

இன்று (மார்ச் 27 ) ஜாமீன் மனுக்களை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அஜித் வீட்டிற்கு நேரில் சென்ற சூர்யா, கார்த்தி

ராகுல் தகுதி நீக்கத்துக்கு வானதி எதிர்ப்பா? சட்டமன்றத்தில் ’கருப்பு’ சலசலப்பு!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0