கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் 14ஆம் தேதி கரும்பு அரவை பணிகள் தொடங்க உள்ள நிலையில், பாய்லர் நெருப்பு போட்டு கரும்பு அரவை தொடக்க பணிக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கரும்பு விவசாயிகள் மற்றும் இயக்குநர்கள் ஆலோசனை கூட்டம் மேலாண்மை இயக்குநர் யோகவிஷ்னு தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சர்க்கரை ஆலை சார்பாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும்,
ஆலை முழுவதிலும் முட்செடிகள், புற்கள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் விஷப் பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை அதிக அளவில் நடமாடுவதால் புதர்களை உடனே அகற்ற வேண்டும் என்றும்,
மேலும் கடந்த ஆண்டு அரவையின் போது சுமார் 5,000 சர்க்கரை மூட்டைகள், கரும்பு பால் உள்ளிட்டவைகளை வீணாக்கியதாகவும் இதற்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம் என்றும்,
கரும்பு அறுவடை செய்யும் இயந்திரம் விவசாயிகளுக்கு ஆலை மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இதுவரை வழங்கப்படவில்லை என்றனர்.
மேலும், ஆள் பற்றாக்குறை, கரும்பு வெட்டு கூலி அதிகரிப்பு, உரம் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வருவதாகவும்,
ஆலை நிர்வாக சீர்கேட்டால் ஏற்படும் இழப்புகளை மறைத்து, ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக பொய்யான தகவல்களை அதிகாரிகள் தெரிவித்து வருவதாக விவசாயிகள் அடுக்கடுக்காக குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, விவசாயத் தோட்டத்தில் வெட்டப்படும் ,கரும்பு உடனடியாக ஆலைக்கு கொண்டு வந்து அரவைக்கு செல்ல வேண்டும்.
ஆனால், நிர்வாக சீர்கேட்டால் கரும்பு வெட்டப்பட்டு நான்கு, ஐந்து நாட்கள் கடந்த பிறகுதான் அரவைக்கு அனுப்பப்படுவதாகவும்,
இதனால் கரும்பு எடை குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும்,
இவற்றை எல்லாம் உடனடியாக சரி செய்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் பணி!
தெலங்கானாவில் வெற்றி வாகை சூடப்போவது யார்?
சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைக்க நினைப்போர் குறைவாகச் சாப்பிட வேண்டுமா?
பிரேக்கிங் புயல் எப்ப கரையை கடக்குமோ? அப்டேட் குமாரு