மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி புகார் எண்களை அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29 ஆம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று(அக்டோபர் 31) மாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது.
ஆரம்பத்தில் மிதமாக பெய்து வந்த மழை நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்க ஆரம்பித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(நவம்பர் 1) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை தற்போது வரை மழை விடாமல் பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாகவே சென்னை லேசான மழைக்கே அதிக பாதிப்புகளை சந்திக்கும். எனவே இந்த ஆண்டு மழை பாதிப்புகளை சமாளிக்க அரசு முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்து வந்தது.
நேற்று நள்ளிரவே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மழை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.
மழை பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய, மழை தொடர்பான புகார்களை நம்ம சென்னை செயலி அல்லது ட்விட்டர் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1913 என்ற எண்ணில், தெருவிளக்கு பழுது, மழை நீர் தேக்கம், குடிநீருடன் கழிவு நீர் கலப்பு, கழிவு நீர் கரைதல், குடிநீர் வரவில்லை, மரம் விழுதல், மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
மேலும் 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கலை.ரா
பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை காட்டிலும் வசூலை குவித்த காந்தாரா