இரவில் குடிபோதையில் சிறார்களை தாக்கிய பாடகர் மனோவின் மகன்!

தமிழகம்

பிரபல பின்னணி பாடகர் மனோ- ஜமீலா தம்பதிக்கு  இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில்,  பாடகர் மனோவின் மகன் நேற்று (செப்டம்பர் 11) இரவு குடிபோதையில் இரு சிறார்களைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர்.  அங்கு சிறார்கள் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  குடிபோதையில் இருந்த மனோவின் மகன் உள்ளிட்டவர்கள் சிறுவர்களை  சரமாரியாகத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலால் 16வயது சிறுவன் ஒருவனுக்கு  பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டுக்கு  சென்று அவரது மகனிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மனோவின் மகன் குடிபோதையில் சிறுவர்களை தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

அதோடு, மனோ மகனின் நண்பர்களிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மனோவின் மகன் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என்று சொல்லப்படுகிறது. இதுவரை, எந்த சர்ச்சையிலும் சிக்காத மனோவின் பெயர் முதன்முறையாக நெகடிவ் விஷயத்தில் சிக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஒரு போட்டோ எடுத்துட்டு நடிக்கிறாங்க! பி.டிஉஷா மீது பாய்ந்த வினேஷ் போகத்

இமானுவேல் சேகரன் நினைவுதினம் : உதயநிதி மரியாதை… ஸ்டாலின் புகழாரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *