காவல் மரணங்கள் : இழப்பீட்டுத் தொகை உயர்வு!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையின்படி காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூடு மரணங்கள் ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

அதன்படி, காவல்துறையின் சித்திரவதை மற்றும் துப்பாக்கிச் சூடு, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் ஏற்படும் மரணத்திற்கான இழப்பீடு 5 லட்சத்திலிருந்து ரூ.7.50 லட்சமாகவும்,

போலீசாரால் உடல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கண், கை அல்லது மூட்டு இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது வழங்கப்படும் இழப்பீடு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும்,

ஜே.எம்/ஆர்.டி.ஓ விசாரணையின் மூலம் நிரூபிக்கப்பட்ட சித்திரவதை வழக்குக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு நடைமுறை பிப்ரவரி 23ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறதென்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா

கடலூர் பந்த்: 100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கம்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel