ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு!

தமிழகம்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘ரூபாய் 8,000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சியில் அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலம் வரை ஊதியம் வழங்கும்’ என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை டி.பி.ஐ வளாகத்தில்  கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஆறு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அந்த அரசாணையில் நிதித்துறை செயலாளரை தலைவராகக் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,

இந்த குழுவினர் இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அரசிடம் சமர்ப்பிப்பார்கள் என்றும், அந்த அரசாணையின் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: வேர்க்கடலை ரைஸ்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.