“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் ஆக்ஷன்”: கமிஷனர் அருண் பேட்டி!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி டிஜிபியாக மாற்றப்பட்டார்.
புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் இன்று (ஜூலை 8) பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண்,
“சென்னை மாநகரம் என்பது எனக்கு புதிதல்ல. இங்குள்ள சில பிரச்சனைகள், குறிப்பாக சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் உள்ள சிக்கல்கள், ரவுடிசத்தை கண்ட்ரோல் செய்வது, போலீஸ் டிபார்ட்மெண்டில் உள்ள ஊழல் குற்றங்கள், கட்டப்பஞ்சாயத்து இதையெல்லாம் தடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன்.
புள்ளிவிவரங்களின் படி தமிழத்தில் கொலை குற்றங்கள் கடந்த இரண்டு வருடங்களில் குறைந்துள்ளது. சென்னையில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை அதிகாரிகள் புரொபஷனலாக வேலை செய்தாலே இங்கு அனைத்து விதமான குற்றங்களும் குறையும். சென்னையில் ரவுடிசம் ஒழிக்கப்படும். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி!
யாருக்கு ஓட்டு? ஏன், எதற்காக? -விக்கிரவாண்டி மக்களின் பேட்டி!