மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து… “விக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்கு” – கமிஷனர் அருண்

தமிழகம்

அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (நவம்பர் 13) தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷை போலீசார் இன்று கைது செய்தனர். இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற கிண்டி மருத்துவமனையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண், “அரசு மருத்துவரை கத்தியால் குத்திய குற்றவாளி விக்னேஷின் தாயார் கடந்த ஆறு மாதமாக கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று கூட மருத்துவர் பாலாஜியிடம் ஒரு மணி நேரம் விக்னேஷ் பேசியுள்ளார்.

சென்னை மாநகரத்தில் ராஜீவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. காவல் நிலையம் இல்லாத மருத்துவமனைகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றவாளி விக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வந்தாச்சு இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : எங்கே முதலில் ஓடுகிறது?

மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து… தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0