2024-25 நிதியாண்டு: வணிகவரித்துறை வருவாய் இத்தனை கோடியா?  

Published On:

| By Selvam

வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதியாண்டில் டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, தலைமையில் நேற்று (டிசம்பர் 24) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மறைந்த வணிகர்களின் குடும்பத்தினரான திருத்துறைப்பூண்டி பா.சுசிலா, ராசிபுரம் யு.கஸ்தூரி மற்றும் திருவண்ணாமலை வி.விஜயலட்சுமி ஆகிய மூன்று நபர்களுக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3,00,000 காசோலையை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் 23.12.2024 வரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வரி வருவாய் வளர்ச்சியில் இந்திய அளவில் தற்போது தமிழ்நாடு மாநிலம் முதன்மையாக விளங்குகிறது. வரும் மாதங்களிலும் அனைத்து இணை ஆணையர்களும் மேலும் சிறப்புடன் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா பாயசம்

மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்தது ஏன்?

’எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?’ : அண்ணாமலைக்கு ஜெயக்குமார் காட்டமான பதில்!

இந்த வருசத்துல என்ன சாதிச்சீங்க : அப்டேட் குமாரு

பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share