சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து இன்று முதல் (செப்டம்பர் 1) ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படியே செப்டம்பர் முதல் நாளான இன்று 19 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.157.50 குறைந்து ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.92.50 குறைந்த நிலையில் இந்த மாதம் ரூ.157.50 விலை குறைந்துள்ளது.
100 ரூபாய்க்கும் மேல் விலை குறைந்திருப்பதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மோனிஷா
கிச்சன் கீர்த்தனா: சிக்கன் முட்டை வறுவல்!
குட்டி மலிங்கா பந்துவீச்சில் சிதறிய வங்காளதேசம் அணி!