commercial gas rate hike

வணிக சிலிண்டர் விலை உயர்வு!

தமிழகம்

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.203 உயர்ந்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அக்டோபர் 1-ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்துள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.203 விலை உயர்ந்து ரூ.1898-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஏப்பம் விடுபவரா நீங்கள்… தீர்வு என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *