19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைந்து ரூ.1929.50-க்கு இன்று (டிசம்பர் 22) விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து வணிக சிலிண்டர்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் வணிக சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.1968.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.39 குறைந்து ரூ.1929.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வணிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
வீட்டு உபயோக சிலிண்டரில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் ஓட்டல்களில் உணவு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
எண்ணூர் எண்ணெய் கழிவு: உயிருக்குப் போராடும் பறவைகள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!