வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.8 அதிகரித்து ரூ.1,945-க்கு இன்று (ஜூலை 1) முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி ஜூலை 1 ஆம் தேதியான இன்று, புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்துள்ளது.
இதனால் கடந்த மாதம் ரூ.1.937-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் இந்த மாதம் ரூ.1,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் முதல் நாள் (ஜூன் 1) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்த நிலையில் இந்த மாதம் ரூ.8 உயர்ந்துள்ளது.
இருப்பினும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி 1,180 .50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மோனிஷா
ஆளுநருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரம்!
30 நாட்களை கடந்த போர் தொழில் – வெற்றி விழா!