சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை இன்று (மே 1) ரூ.171 குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிவாயு விலையும் உயர்த்தப்படுகிறது.
மாதத்தின் முதல் நாளான இன்று (மே 1) சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரு.171 குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்து ரூ.2.192-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2,021.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்து வருவதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.1118.50-க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
எலான் மஸ்க் சரியான தலைவர் இல்லை: ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி
உங்கள் ஊழியர்களை அனுப்பி வையுங்கள்: கலெக்டருக்கு கடிதம் எழுதிய விவசாயி