சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா கடந்த மே 23-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவி வகித்து வந்தார்.
இந்தநிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் டெல்லியில் நேற்று உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை உயர்நீமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதேபோல மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
யார் இந்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்?
மும்பையில் பிறந்த கே.ஆர்.ஸ்ரீராம் பி.காம் (நிதிக் கணக்கியல் மற்றும் மேலாண்மை), பி.பி.எல் சட்டப்படிப்பை மும்பை பல்கலைக்கழகத்தில் படித்தார். தொடர்ந்து எல்.எல்.எம் சட்ட மேற்படிப்பை லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பயின்றார்.
1986-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
மூத்த வழக்கறிஞர் எஸ்.வெங்கடேஸ்வரனிடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர் அவரே வழக்கை எடுத்து நடத்த ஆரம்பித்தார்.
இவர் வணிக விவகாரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போதைப்பொருள் வழக்கு: ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்!
IND vs SL: ஹர்திக் vs கே.எல்.ராகுல்… இந்திய அணியின் கேப்டன் யார்?