ரயில் முன் தள்ளி மாணவி கொலை : கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

தமிழகம்

மாணவி சத்யாவை திட்டமிட்டே கொலை செய்ததாக கைதான இளைஞர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

2016ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோன்று நேற்று ஒரு சம்பவம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்தது.

ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா. தி.நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று மதியம் கல்லூரிக்குச் செல்வதற்காக 1:15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தார்.

அப்போது சத்யா வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சதீஷ் , தன்னை காதலிக்குமாறு சத்யாவிடம் வற்புறுத்தியிருக்கிறார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நடைமேடை 1-ல் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டார் சதீஷ்.

இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சத்யா.

இந்த கொலை வழக்கு குறித்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவு ஈசிஆர் சாலையில் சுற்றித்திரிந்த சதீஷை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இரவில் நடத்தப்பட்ட விசாரணையில், திட்டமிட்டே கொலை செய்யக் காத்திருந்ததாகத் திடுக்கிடும் வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார்.

“சத்யா நிச்சயம் கல்லூரிக்குச் செல்ல ரயில் நிலையத்துக்கு வருவார் என்று முன்பே அங்குச் சென்று காத்திருந்தேன். ரயில் வரும்போது சத்யாவைத் தள்ளிவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன்.

சத்யாவை தள்ளிவிட்டதும் பயணிகள் அலறியடித்துக் கத்தியதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து அவரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

கைதான கொலையாளி சதீஷின் தற்போதைய புகைப்படமும் வெளியாகியுள்ளது.

பிரியா

பட்டாசு வெடிக்கும் நேரம்: சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை!

மகள் கொலை – சோகத்தில் தந்தை உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0