சென்னை: ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை!

தமிழகம்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23). அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

சதீஷூம், சத்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று(அக்டோபர் 13) இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. இந்நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார் சதீஷ்.

இதில் ரயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர செயலைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சத்யாவின் உடலை மீட்டனர்.

மக்கள் நடமாட்டம் இருக்கும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலை.ரா

கேரளாவை உலுக்கிய நரபலி:12 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

இப்படி பேசியதால் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் : பி.சி.ஸ்ரீராம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0