நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தியேட்டருக்கு போலீஸ் நோட்டீஸ்!

தமிழகம்

நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளுக்கு கோயம்பேடு போலீசார் இன்று( மார்ச் 31) நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த பத்து தல திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை சென்னை ரோகிணி திரையரங்கில் பார்ப்பதற்காக வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தை திரையரங்க காவலாளி படம் பார்ப்பதற்காக திரையரங்கத்திற்குள் அனுமதிக்கவில்லை.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ரோகிணி திரையரங்கம் மீதும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை திரையரங்கத்திற்குள் அனுமதிக்க மறுத்த காவலாளி மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர்.

koyambedu police sends notice to rohini theatre worker

சமூக வலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்பால் ரோகிணி திரையரங்கம் நரிக்குறவ மக்களை படம் பார்க்க அனுமதித்தனர்.

இதுகுறித்து ரோகிணி திரையரங்கம் தரப்பில்,

”பத்து தல படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றதால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் படம் பார்க்க வந்தனர்.

இதனால் அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை” என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

ரோகிணி திரையரங்கத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் வெற்றி மாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் பதிவுகள் வெளியிட்டிருந்தனர்

நரிக்குறவர் சமூகத்தினரை ரோகிணி திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுத்த காசாளர் ராமலிங்கம், காவலாளி குமரேசன் ஆகிய இரண்டு நபர்கள் மீதும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தநிலையில், கோயம்பேடு போலீசார் ரோகிணி திரையரங்க நிர்வாகிகள் ராமலிங்கம், குமரேசன் ஆகியோருக்கு இன்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

அதில் எதற்காக நரிக்குறவ மக்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என்று மதுரவாயல் காவல் உதவி ஆணையர் ரமேஷ் பாபு முன்னிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

செல்வம்

கலாஷேத்ரா விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

கலாஷேத்ரா பாலியல் புகார்: மகளிர் ஆணையம் விசாரணை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *