மழை காரணமாக தமிழ்நாட்டில் 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
மதுரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
மதுரையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
இந்த சூழலில் மதுரையில் இன்று (நவம்பர் 9) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
அதுபோன்று கோவை மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, திருப்பூர் மாவட்டங்களிலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹெல்த் டிப்ஸ்: தினமும் வேப்பிலையை சாப்பிட்டுவந்தால் என்னாகும் தெரியுமா?
பியூட்டி டிப்ஸ்: ஹேர் டை, ஹேர் கலரிங் செய்கிறீர்களா… இவற்றில் எல்லாம் கவனம் தேவை!