கோவை உக்கடத்தில் நேற்று (அக்டோபர் 23) காரில் பயணித்த போது சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் அவரது வீட்டிலிருந்து, அவர் உட்பட 5 நபர்கள் மர்ம பொருட்களை எடுத்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
நேற்று அதிகாலை கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக மாருதி காரில் கேஸ் வெடித்து சிதறியதில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் விசாரணையில், உயிரிழந்த நபர் உக்கடம் ஜி.எம்.நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபீன் என்பது தெரிய வந்தது.
இவர் அந்த பகுதியில் உள்ள பழைய துணிகள் விற்பனை செய்யும் கடைகளில் வேலை செய்து வந்துள்ளார்.
தனிப்படை போலீசார் ஜமேஷா முபீன் வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கோட்டைபுதூர் – ஜி.எம் நகர் தெருவில் உள்ள ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து முபீன் உள்பட நான்கு நபர்கள் ஒரு பெரிய வெள்ளை நிற சாக்கு பையை அவரது வீட்டின் வாசலில் வைக்கின்றனர்.
பின்பு ஒரு நபர் தெருவின் முனையில் நிறுத்தப்பட்டுள்ள மாருதி காரின் டிக்கியை திறந்துவிட்டு, மீண்டும் வீட்டின் வாசலுக்கு வருகின்றார்.
பின்னர் நான்கு பேர், சாக்குப்பையின் நான்கு முனைகளை பிடித்து, அதில் உள்ள கருப்பு நிற மர்ம பொருளை எடுத்து செல்கின்றனர். இந்த காட்சி இரவு 11 .25 மணியளவில் பதிவாகி உள்ளது.
ஜமேஷா முகமது உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் ஒரு பெரிய சாக்குப் பையில் மர்ம பொருட்களை எடுத்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வினோத் அருளப்பன்
தங்கலான் : கோலார் தங்கவயல் அடிமைகளின் கதையா?
தி பாஸ் ரிட்டர்ன்ஸ் : ஆக்ஷன் கெட்டப்பில் விஜய்
ஜமேஷா முகமது என்னடா நீங்களே முஹம்மது என்று செத்து கேட்டீங்களா டா மின்னம்பலம் நீ சங்கீயா