பாதுகாப்பு வளையத்தில் கோவை; துணை ராணுவப்படையினர் வருகை!

Published On:

| By Vinodh Arulappan

அக்டோபர் 23-ஆம் தேதி, கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நடந்த கார் வெடிப்பு தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிவிரைவுப் படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை, ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், விமான நிலையம், ரயில்நிலையம், காந்திபுரம், சிங்காநல்லூர் மற்றும் சாய்பாபா கோவில் பேருந்து நிலையங்கள் என முக்கியமான அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை தவிர, சிஆர்பிஎப் பின் (துணை ராணுவத்தினர்) அதிவிரைவு படை இரண்டு பட்டாலியன் போலீசார், அதிநவீன ஆயுதங்களோடு, கார் வெடிப்பு நடந்த கோட்டைமேடு பகுதி, அதை ஒட்டியுள்ள உக்கடம், கண்ணப்பன் நகர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகரின் அனைத்து எல்லைகளிலும் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.

மேலும், முக்கிய வழிபாட்டு தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மாநகர காவல் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அடுத்த ஏழு நாட்களுக்கு மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதால், நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வினோத் அருளப்பன்

“தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்” – ஓபிஎஸ் காட்டம்

ஆங்கிலேயர்களை ஆளப்போகும் இந்திய மருமகன் : யார் இந்த ரிஷி சுனக்?