கோவை: யானை தாக்கி பாரதியார் பல்கலை காவலாளி பலி!

தமிழகம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் நுழைந்த ஆண் காட்டு யானை தாக்கியதில் காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் யானை நடமாட்டம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.

கோடைக்காலம் என்பதால், வனப்பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து செல்வது உண்டு.

அந்த வகையில், கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகதிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் சமயபுரம் சாலையைக் கடந்து எதிர்பாராத விதமாக அருகே உள்ள மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகளுக்குள் புகுந்தது. மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் வயல்களிலும் நுழைந்து பயிர்களையும் சேதம் செய்கிறது.

பல்கலைக்கழக காவலாளியை தாக்கிய காட்டு யானை:

அந்த வகையில், இன்று (மே 23) கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு ஆண் காட்டு யானை நுழைந்தது. அங்கும் இங்கும் திரிந்த அந்த காட்டுயானை, அதனை விரட்ட வந்த காவலாளி சண்முகத்தை தாக்கியது.

காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த காவலாளியை மீட்ட சக ஊழியர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்தார்.

காவலாளியை தாக்கிய காட்டு யானையை டிரோன் மூலமாக கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இது தவறான வழிகாட்டுதல் : தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் பதில்!

ஸ்டாலின் என்ன சாதனை செய்தார்?: ராமதாஸ் கேள்வி!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *