கோவையில் சிலிண்டர் வெடித்து கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நேற்று (அக்டோபர் 23) அதிகாலையில் கோவை உக்கடத்தில் காரில் பயணித்த போது, சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபீன் என்ற நபர் உடல் கருகி பலியானார்.

உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்து ஏடிஜிபி தாமரை கண்ணன், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நபர் உக்கடம் ஜி.எம்.நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபீன் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இந்தநிலையில், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் வெடித்து சிதறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாருதி கார், ஈஸ்வரன் கோவிலின் அருகில் செல்லும் போது, சரியாக அதிகாலை 4 மணி 05 நிமிடங்கள் 26 நொடிகளில் வெடித்து சிதறும் காட்சி பதிவாகி உள்ளது. பின்னர் அந்த இடம் முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சியளிப்பதும், அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தை நோக்கி ஓடுவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
வினோத் அருளப்பன்
கோவை பயங்கரம் : சாக்குப்பையில் வெடிபொருட்களா?
தங்கலான் : கோலார் தங்கவயல் அடிமைகளின் கதையா?