கோவையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரத்தில், 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிரிழப்பு:
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ள விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உள்ள சிறுவர் பூங்காவில் மே 23ஆம் தேதி மாலை விளையாட சென்ற பிரியா, ஜியான்ஸ் என்ற சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் உயிரிழப்பு தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், பூங்காவை மேம்படுத்தியபோது யுஜி கேபிளை தரை வழியாக இணைத்துள்ளனர். இதன் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு சிறுவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது.
எனவே, சந்தேகத்திற்கு மாறான மரணம் என்ற இந்த வழக்கை விபத்து என்று மாற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மின்கசிவு ஏற்பட காரணமாக இருந்த 3 பேர் மீது சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, சிறுவர் பூங்காவின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட முருகன், சீனிவாசன் மற்றும் எலக்ட்ரீசியன் சிவா ஆகிய 3 பேர் மீது கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தும் சட்டப்பிரிவு 304 (ஏ)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயலலிதா இந்துத்துவ தலைவரா? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!