கோவை மத்திய சிறையில் உள்ள 32 பிளாக்குகளில் 105 பெண் கைதிகள், விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்பட மொத்தம் 2,500 கைதிகள் உள்ளனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு போகி பண்டிகை நாளான ஜனவரி 13-ஆம் தேதி செந்தமிழ் அறக்கட்டளையின் சார்பாக பொங்கல் விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார் சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார்.
மெளன ராகம் முரளி இசை கச்சேரி குழுவினர் சிறை வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கச்சேரி நடத்தினர். இந்த கச்சேரியில் சிறைக்கைதிகள் சிந்திக்கும் வகையிலும், பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையிலும் கலைஞர்கள் பாட்டு பாடி அசத்தினர்.

கலையரங்கத்தில் 700 கைதிகள் அமரந்து இசைக்கச்சேரியை கண்டுகளித்தனர். 32 பிளாக்குகளிலும் எல்.இ.டி திரை மூலம் நிகழ்ச்சியானது லைவாக ஒளிபரப்பப்பட்டது. மற்ற கைதிகள் அனைவரும் எல்.இ.டி மூலமாக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறை சூப்பிரண்டு செந்தில் குமார், டிஐஜி சண்முக சுந்தரம் மற்றும் சிறைத்துறை காவலர்கள், வார்டன், ஜெயிலர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இசைக்கச்சேரி நிகழ்ச்சி சிறைக்கைதிகளுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
அன்றைய தினம் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், சாம்பார், வடை, பாயாசம், கரும்பு என விதவிதமான பொங்கல் விருந்து சிறைக்கைதிகளுக்கு பரிமாறப்பட்டது. மொத்தத்தில் இந்த பொங்கலானது சிறைக்கைதிகளுக்கு இசை பொங்கலாக அமைந்தது என்கிறார்கள் சிறைக்கைதிகளின் உறவினர்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தை மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? – வானிலை மையம் வார்னிங்!