கோவை கார் விபத்தில், தாயார் கூறியதால் பெரோஸ் இஸ்மாயில் சகோதரர்கள் போலீசில் சரணடைந்துள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
கோவையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை கார் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இவ்வழக்கில் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் உயிரிழந்த ஜமேசா முபினின் உறவினர் அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கை தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. தற்போது என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், நிறைய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேசா முபின் வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. அதில், முபின் வீட்டருகே 3 பேர் காரில் சிலிண்டரை ஏற்றும் காட்சி பதிவாகியிருந்தது.
அவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாய் விசாரித்து வந்த நிலையில், சகோதரர்கள் பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அண்டை வீட்டுக்காரரான முகமது ரியாஸ் ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கோவையில் முபின் காரில் சிலிண்டர் ஏற்றிய 3 பேரும் அவர்களது தாயார் கூறியதால் தாமாக போலீசில் சரணடைந்துள்ளனர்.
இதய நோயாளியான ஜமேசா முபின், வீட்டை மாற்றிக்கொண்டு செல்வதால், அங்கிருந்த பொருட்களை எடுக்க உதவி செய்ய வேண்டும் என அவர் தன்னிடம் கேட்டுக்கொண்டதால், எனது மகன்களான பெரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயிலையும், அவர்களுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரியாஸையும் அனுப்பிவைத்துள்ளேன் என பெரோஸ் இஸ்மாயிலின் தாயார் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
சோகத்தில் முடிந்த நாடக ஒத்திகை!
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி!